செய்திகள்

அபார பந்துவீச்சு: ஷமிக்கு முத்தமளித்த அஸ்வின்!

நியூசிலாந்து எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

DIN

உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று (நவ.15) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.  50 ஓவர் முடிவில் இந்தியா 397 ரன்களைக் குவித்தது. கோலி 117, ஸ்ரேயாஷ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80  ரன்கள் எடுத்து அசத்தினார்கள். 

அடுத்து ஆடிய நியூசி. அணி போராடி தோற்றது. 48.5 ஓவர்களில் நியூசி. அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

தொடக்க வீரர்ரகளான கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிரடியாக இறுதி வரை போராடி 134 ரன்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 69, பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.   

இந்தியா சார்பாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சிராஜ், பும்ரா, குல்தீப் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

இந்த ஆட்டத்தின் போக்கையே தன் பந்துவீச்சால் மாற்றிய ஷமிக்கு இந்திய அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஷமியின் கையில் முத்தம் கொடுத்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தமிழக வீரர் அஸ்வினை அணியில் சேர்த்து 6 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சேர்க்கப்படவில்லை.

மேலும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி உள்பட 10 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணியில், ஒரு போட்டியில் கூட அஸ்வின் களமிறங்கவில்லை. இருப்பினும், சக பந்துவீச்சாளரின் திறமையை முத்தம் கொடுத்து பாராட்டிய அஸ்வின் டீமில் இல்லையென்றாலும் டிரெண்டிங்கில் இருக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT