செய்திகள்

சிஎஸ்கே அணிக்காக விளையாடியதால் இது சாத்தியமானது: ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக செயல்பட உதவியதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் உள்பட 3 விக்கெட்டுகளை முக்கியமான தருணத்தில் அவர் கைப்பற்றினார்.

முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகள் எடுத்தது குறித்து ரவீந்திர ஜடேஜா கூறியதாவது: நான் சிஎஸ்கே அணிக்காக இந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடியுள்ளேன். அதனால் இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து எனக்குத் தெரியும். இன்று எனக்கு 2-3 விக்கெட்டுகள் கிடைக்கும் என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் ஸ்டம்புகளுக்கு பந்தை வீசினேன். பந்தில் நல்ல சுழல் இருந்தது. எந்த பந்து நேராக செல்லும், எந்த பந்து திரும்பும் என்பது உங்களுக்குத் தெரியாது. சென்னையில் போட்டி என்றாலே மைதானம் நிறைய ரசிகர்களைக் காண முடியும்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT