செய்திகள்

3-வது சதம் விளாசி டி-காக் அசத்தல்: வங்கதேசத்துக்கு 383 ரன்கள் இலக்கு!

DIN

வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக்டோபர் 24) நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிஸ் களமிறங்கினர். ரீஸா ஹென்ரிக்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ராஸி வாண்டர் துசென் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் கேப்டன் மார்கரம் மற்றும் டி காக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய மார்கரம் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 7  பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் க்ளாசன்  மற்றும் டி காக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 140 பந்துகளில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சதம் இந்த உலகக் கோப்பைத் தொடரில் டி காக் அடிக்கும் 3-வது சதமாகும். க்ளாசன் சிக்ஸர் மழை பொழிந்து வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறடித்தார். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய க்ளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50  ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்தது.

வங்கதேசம் தரப்பில்  ஹாசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெஹிதி ஹாசன் மிராஸ், ஷோரிஃபுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT