செய்திகள்

சச்சின் சாதனையை சமன்செய்த ரச்சின் ரவீந்திரா!

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். 

DIN

கடந்த அக்.5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388/10 ரன்கள் எடுத்துள்ளது. 

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கான்வே 28 ரன்களுக்கும் வில் யங் 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடி 77 பந்துகளில்  சதமடித்தார். 89 பந்துகளில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். 

77 பந்துகளில்  சதமடித்த ரச்சின் ரவீந்திரா

26 வயதுக்குள் உலகக் கோப்பையில் சதமடித்த விரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார் ரச்சின் ரவீந்திரா (23 வருடம் 244 நாள்கள்).  இந்தப் பட்டியலில் சச்சின் (22 வருடம் 313 நாள்கள்) முதலிடத்தில் இருக்கிறார். 

மேலும் நியூசிலாந்து அணிக்காக ஒரே உலகக் கோப்பையில் 2 சதமடித்த வீரர்கள் பட்டியலில் 4வது வீரராக இணைந்துள்ளார். இதற்குமுன்பாக க்ளென் ரட்னர் (1975), மார்டின் கப்டில் (2015), கேன் வில்லியம்சன் (2019) அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

குறைந்த பந்துகளில் சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் படித்துள்ளார் ரச்சின் ரவீந்திரா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

SCROLL FOR NEXT