செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல்; சஞ்சு சாம்சனுக்கு இடமில்லையா?

இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியுள்ளதால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். 

DIN

இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியுள்ளதால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். 

இந்திய வீரர்கள் 15  பேர் அடங்கிய உத்தேச அணி விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக  இந்திய வீரர் கே.எல்.ராகுல் நீண்ட நாள்கள் அணியில் இடம் பிடிக்காமல் இருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்  அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடெமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், முதல் இரண்டு போட்டிகளில் இருந்து அவர் விலகினார். 

இந்த நிலையில், இந்திய அணியின் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி சான்றிதழ் வழங்கியுள்ளதால் அவர் 15 பேர் அடங்கிய உலகக் கோப்பைக்கான உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். 

உலகக் கோப்பைக்கான இந்திய அணி நாளை மறுநாள் (செப்டம்பர் 5) அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தேர்வுக் குழுவினர் ராகுலின் உடற்தகுதி குறித்து தெரிந்து கொண்டு அணி வீரர்கள் விவரங்களை அறிவிக்கலாம் என முடிவு செய்திருந்தனர். தற்போது, கே.எல்.ராகுல் முழுவதும் குணமடைந்துள்ளதால் அவர் அணியில் இடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது. அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு இஷான் கிஷன் உள்ளார். இதனால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைப்பதற்கு சிக்கல் எழுந்துள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT