இந்தியா பேட்டிங்: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு!
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிக்க: சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்!
இந்திய அணியில் இரு மாற்றங்கள்: ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஸ்ரேயஸ் ஐயருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார். ஸ்ரேயஸ் ஐயருக்கு முதுகுவலி பிரச்னை என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப், பும்ரா, மொஹமது சிராஜ்.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா?
பாகிஸ்தான் அணி நேற்றே தங்களது அணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, இஃப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், பஹீம் அஷ்ரப்.