படம்: டிவிட்டர் | பிசிசிஐ 
செய்திகள்

இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

DIN

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த பாகிஸ்தான், இந்தியா, இலங்கை வங்கதேசம் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். ஸ்ரேயாஸுக்கு பதிலாக நேற்று களமிறங்கிய ராகுலே இன்றும் விளையாடுகிறார்.

இந்திய அணி: ரோஹித், ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கே.எல். ராகுல், ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப், பும்ரா, மொஹமது சிராஜ். 

இலங்கை அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT