செய்திகள்

ஆசிய கோப்பை: அக்‌ஷர் படேல் விலகல்? அவருக்கு பதிலாக தமிழக வீரர்!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அக்‌ஷர் படேல் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பா் 4 ஆட்டத்தில் வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து சூப்பா் 4 சுற்றில் ஆறுதல் வெற்றியுடன் போட்டியிலிருந்து வங்கதேசம் வெளியேறியது.

ஷுப்மன் கில், அக்‌ஷர் படேல் போராட்டம் வீணாகியது. இந்தப் போட்டியின்போது அக்‌ஷர் படேலுக்கு தொடைப்பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. பேட்டிங்கின்போது சிரமத்துடன் விளையாடியதை பார்க்க முடிந்தது. அவர் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா நிச்சயம் வென்றிருக்கும். 

இந்நிலையில் காயம் காரணமாக அக்‌ஷர் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் உள்ளதால் வாஷிங்டன் சுந்தர் நிச்சயமாக அணியில் இருப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை (செப்.17) மதியம் 3 மணிக்கு இந்தியா இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பலப் பரீட்சை செய்ய உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தவெக மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

இசைக்கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT