இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம்: ரோஹித் சர்மா
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பது கடினம்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான முடிவு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 2) முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கடினமான முடிவு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரில் ஒருவரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். இருவருமே மிகச் சிறந்த வீரர்கள். இருவருமே அவர்களது தனித்திறனைப் பயன்படுத்தி போட்டியை வென்றுக் கொடுப்பவர்கள். இந்திய அணிக்காக கடந்த காலங்களில் பல போட்டிகளில் இருவரும் வெற்றி பெற்றுத் தந்துள்ளனர் என்றார்.