கிரஹாம் தோர்ப் படம் |ஐசிசி
செய்திகள்

பிரபல முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் இன்று (ஆகஸ்ட் 5) காலமானார்.

DIN

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் இன்று (ஆகஸ்ட் 5) காலமானார்.

55 வயதாகும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரஹாம் தோர்ப் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து உடல்நலக் குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கிரஹாம் தோர்ப் அவரது மனைவி அமாண்டா மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அவர் இன்று காலமானார். அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் பதிவினை வெளியிட்டுள்ளது.

கிரஹாம் தோர்ப் கடந்த 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இடது கை பேட்ஸ்மேனான தோர்ப் 2000-2001 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டு தொடர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

இங்கிலாந்து அணிக்காக 1993 மற்றும் 2005 ஆம் ஆண்டு இடைவெளியில் அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கிரஹாம் தோர்ப்பின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

சேலை, கடற்கரை, மணல், சூரியன்... நடாஷா சிங்!

SCROLL FOR NEXT