2வது டெஸ்ட்: அதிரடியாக துவங்கிய இந்திய அணி 99/2க்கு தடுமாற்றம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதல் ஆட்டத்தில் வென்று இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.
இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா என முக்கியமான வீரா்கள் இல்லாதது அணியை பாதித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அதிரடியாக ஆரம்பித்த இந்திய அணி 2 விக்கெட்டுகளை இஅழந்து தடுமாறி வருகிறது. ரோஹித் சர்மா 14 ரன்களுக்கும் ஷுப்மன் கில் 34க்கும் அவுட்டாகினர்.
இந்திய அணி 29 ஓவர் முடிவில் 99/2 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 51*, ஷ்ரேயாஷ் ஐயர் ரன்னேதுமின்றி களத்தில் விளையாடி வருகிறார்கள்.