சர்ஃபராஸ் கான் அவரது தந்தையை கட்டியணைக்கும் காட்சி. 
செய்திகள்

நாங்கள் குடிசைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்: சர்ஃபராஸ் கானின் தந்தை உருக்கம்!

இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்ஃபராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

DIN

இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

சர்ஃபராஸ் கானை கண்ணீருடன் கட்டியணைத்து இந்திய அணிக்கு அனுப்பிய அவரது தந்தையும் (நௌஷாத் கான்) சமூக வலைதளங்களில் வைரலானார். அவர் அணிந்திருந்த டி ஷர்ட் வாசகம் மிகவும் புகழ்பெற்றது. கிரிக்கெட் ஜென்டில்மேன்களுக்கான போட்டி மட்டுமேயல்ல; அது அனைவருக்குமானது என்ற வசனம் இணையத்தில் வைரலானது.

ஆனந்த கண்ணீரில் சர்ஃபராஸ் கான் குடும்பத்தினர்.

நௌஷாத் கான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

நாங்கள் குடிசைப் பகுதியில் இருந்து வந்திருக்கிறோம். அங்கு கழிவறைக்கு செல்வதற்காக வரிசையில் நின்றிருக்கும்போது எனது மகன்கள் அடி வாங்கியிருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாததில் இருந்து வந்திருக்கிறோம். இங்கிருந்து போனாலும் ஒன்றுமில்லை. சர்ஃபராஸ் ஒருநாள் என்னிடம் ’கவலைப் படாதீர்கள் அப்பா. இந்தியாவுக்கு தேர்வாகாவிட்டால் என்ன நாம் மீண்டும் ரயிலில் துணிகளை விற்க செல்வோம்’ எனக் கூறியதாகக் கூறினார்.

சர்ஃபராஸ் கானின் கனவும் அவரது தந்தை கனவும் நனவாகிவிட்டதாக பொது மக்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT