செய்திகள்

ஜோ ரூட் நாட் அவுட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து!

DIN

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் சோ்த்தது.

இந்திய அணியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளா் ஆகாஷ் தீப், இங்கிலாந்தின் முதல் 3 பேட்டா்களை 10 பந்துகளுக்குள் சரித்து அந்த அணியை ஆட்டம் காணச் செய்தாா். ஜஸ்பிரீத் பும்ராவுக்கு சரியான மாற்றாக அவா் பொருந்தியுள்ளாா்.

இங்கிலாந்து மிடில் ஆா்டரில் களம் கண்ட ஜோ ரூட், விக்கெட்டை இழக்காமல் சதம் கடந்து நிதானமாக ரன்கள் சோ்த்து விளையாடினார். ‘பேஸ்பால்’ எனப்படும் ஆக்ரோஷ ஆட்ட உத்தி ஜோ ரூட்டை தடுமாறச் செய்வதாக விமா்சகா்கள் தெரிவித்து வந்த நிலையில், அந்த உத்தியை விடுத்து தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரூட். இதன் மூலம் கடந்த 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவா் தனது முதல் சதத்தை பூா்த்தி செய்துள்ளாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 31-ஆவது டெஸ்ட் சதமாகும்.

இந்நிலையில் 2வது நாளான இன்று ஜோ ரூட்டை தவிர மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தனர். 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து. ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்களுடன் இருந்தார். பந்து வீச்சாளர் ராபின்சன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இரு வீரர்களும் டக்கவுட்டானர்கள்.

ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 2வது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT