செய்திகள்

இப்படி ஆட்டமிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்: ஷுப்மன் கில்

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவுட் ஆகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் ஆகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னிடம் திட்டம் இருந்தது. எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும்போது நான் ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடுவேன். இந்த முறை பதற்றமின்றி இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் உள்ள பிளவுகளில் பந்து படும்போது அந்த பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. மற்றபடி ஆடுகளம் நன்றாகவே இருந்தது.

துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர். அவர்களது 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவியது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 80 - 100 ரன்கள் முன்னிலையில் இருந்தால் நல்லது என பேசிக் கொண்டிருந்தோம். ஜுரல் மற்றும் குல்தீப்பின் பேட்டிங் எங்களது எதிர்பார்ப்புகளையும் தாண்டி பூர்த்தி செய்துவிட்டது. இங்கிலாந்து அணிக்கு வெறும் 46 ரன்களே முன்னிலை கிடைத்தது. முன்னிலை குறைவாக இருந்ததால் எங்களால் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமானதாக மாற்ற முடிந்தது என்றார்.

4-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 38 ரன்களில் சோயிப் பஷீர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ (LBW) முறையில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT