கோப்புப் படம்  
செய்திகள்

ஓய்வு பெற்ற பிறகும் ஃபீல்டிங் செய்த நீல் வாக்னர்!

பிரபல வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வு பெற்ற பிறகும் ஃபீல்டிங் செய்கிறார்.

DIN

பிரபல வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வு பெற்ற பிறகும் ஃபீல்டிங் செய்கிறார்.

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் தனது 37வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த நீல் வாக்னர், நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களில் 2வது அதிகபட்ச பௌலிங் ஸ்டிரைக் ரேட் (52.7) கொண்டவரும் இவர்தான். ரிச்சர்ட் ஹாட்லி 50.8 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் கால் கட்டை விரலில் காயமடைந்தப் பிறகும், மீண்டும் போட்டியில் வந்து விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வை அறிவிக்கும்போது கண்ணீருடன் பேசிய விடியோ வைரலாகியது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியுடன் இணைந்து தேசிய கீதம் பாடினார். மேலும் சப்ஸ்டிடியூட் ஃபீல்டராக ஃபீல்டிங்கும் செய்துள்ளார்.

ஓய்வு பெற்ற பிறகும் அணிக்காக உழைக்கும் நீல் வாக்னர் இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

முதல் டெஸ்டில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா 83 ஓவரில் 260/8 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேமரூன் கிரீன் அசத்தலாக விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

குருவிகுளத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

ஏழுமலையானுக்கு ரூ. 9 கோடி நன்கொடை

கடையநல்லூரில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT