செய்திகள்

சிராஜ் மிரட்டல் பௌலிங்: 55 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்கு சுருண்டது. 

DIN

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். 

டேவிட் பெடிங்ஹாம் (12), கைல் வெர்ரெயின் (15) தவிர மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 

தென்னாப்பிரிக்காவில் சிறந்த பந்து வீசிய இந்திய பௌலர்கள் வரிசையில் சிராஜ் 3வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பாக 2022இல் ஷர்துல் தாக்குர் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இதுதான் தென்னாப்பிரிக்காவின் மோசமான சாதனையாகும். இதற்கு முன்பாக இலங்கை அணியிடம் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக மேலாண்மை படிப்புகளுக்கான ஆன்லைன் பயிற்சி: எப்படி விண்ணப்பிப்பது?

சிவராஜ் பாட்டீலின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்புத் தலைவராகிறார் ஸ்ரீகாந்த் அக்காபள்ளி!

மகாத்மா காந்தி பெயரில் என்ன தவறு? நேருவைத் தொடர்ந்து காந்தியையும் வெறுக்கும் பாஜக! - ஜெய்ராம் ரமேஷ்

ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி!

SCROLL FOR NEXT