வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நோவக் ஜோகோவிச்.  Kirsty Wigglesworth
செய்திகள்

செர்பியாவில் தலைக்குமேல் குண்டுகள் பறந்தன..! விம்பிள்டன் கனவு குறித்து ஜோகோவிச்!

விம்பிள்டன் அரையிறுதி வெற்றி குறித்து நோவக் ஜோகோவிச் பேசியதாவது...

DIN

இந்தாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 10ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

அரையிறுதியில் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியுடன் மோதிய ஜோகோவிச் 6-4, 7 -6 (7-2), 6-4 என்ற நேர்செட்களில் வென்றார்.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நோவக் ஜோகோவிச் இசையமைப்பது போல பாவனை செய்தார்.

முசெட்டியுடன் மோதிய ஜோகோவிச்

இந்த வெற்றி குறித்து ஜோகோவிச் பேசியதாவது:

இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். விம்பிள்டன் கோப்பையை வெல்லுவது எனது சிறுவயது முதலிருக்கும் கனவு. செர்பியாவில் 7 வயதில் எனது தலைக்குமேல் வெடிகுண்டுகள் பறப்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கிருந்து உலகின் முக்கியமான (சென்டர் கோர்ட்) ஆடுகளத்தில் விளையாடுவதில் பெருமையாக நினைக்கிறேன். எனது அறையில் விம்பிள்டன் கோப்பையை அடுக்கிவைத்து என்னை நானே கண்ணாடியில் பார்த்து ஒருநாள் நானும் விம்பிள்டன் சாம்பியன் ஆகுவேன் என சொல்லிக்கொள்வேன். அப்படி நினைத்து பார்ப்பது மிகவும் வலுவாக இருந்தது. நினைத்ததை செய்தும் இருக்கிறேன். இதற்கு எனது குடும்பம் பெரும் உதவியாக இருந்தது.

எனது மனைவி என்னுடன் பல வருடங்களாக இருக்கிறார். தற்போது எனது குழந்தைகளும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இது நம்பமுடியாத பயணம். அதனால் நான் எதையும் சாதராணமாக எடுத்துக்கொள்வதில்லை. நான் மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சி. நான் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். ஞாயிற்றுக்கிழமை கோப்பையை வெல்ல ஆசைப்படுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை! இந்தியாவின் பதில் என்ன?

நாம் வென்றுவிட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Coolie | GVPrakash | CinemaUpdates

பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிவு!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

SCROLL FOR NEXT