முகப்பு
செய்திகள்

அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் நடிகர் மகேஷ் பாபு!

அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

Updated On : 14 ஜூலை 2024, 5:03 pm IST
பகிர்:

அம்பானி இல்லத் திருமண விழாவில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

அம்பானி இல்லத் திருமண விழா மும்பையில் நேற்று முன் தினம் (ஜூலை 12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைத் துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அம்பானியின் இந்த இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எம்.எஸ்.தோனியுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments