செய்திகள்

ரஞ்சிக் கோப்பை அரையிறுதி: 146 ரன்களில் ஆட்டமிழந்த தமிழ்நாடு; மும்பை ஆதிக்கம்!

DIN

ரஞ்சிக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சிக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்கின. முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசம் அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளும் விளையாடி வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. மும்பை அணியின் அபார பந்துவீச்சில் தமிழ்நாடு 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷர்துல் தாக்குர், முஷீர் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளையும், மோஹித் அவஸ்தி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 24 ரன்களுடனும், மோஹித் அவஸ்தி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மும்பை அணி தமிழ்நாட்டைக் காட்டிலும் 101 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் ஆறாட்டு விழா

தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

பேய்க்குளத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

திருமலை: 64,766 பக்தா்கள் தரிசனம்

பிரபஞ்சஅழகிப் போட்டிக்கு தமிழகத்தில் நோ்காணல்

SCROLL FOR NEXT