செய்திகள்

டெஸ்ட் வரலாற்றில் 4-வது முறை; 100-வது போட்டியில் ஒன்றாக களமிறங்கும் வீரர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்குகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் (மார்ச் 7) 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் தொடங்குகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இருவரும் விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுபோன்று ஒரே நேரத்தில் இரண்டு வீரர்கள் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் 4-வது முறையாக விளையாடவுள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஏதர்டன் மற்றும் அலெக் ஸ்டீவார்ட் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் ஒன்றாக களமிறங்கினர்.

அதன்பின் கடந்த 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் ஜாக் காலிஸ், ஷான் பொல்லக் மற்றும் நியூசிலாந்து வீரர் ஸ்டீஃபன் பிளமிங் தங்களது 100-வது போட்டியில் ஒன்றாக விளையாடினர்.

மூன்றாவது முறையாக கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் அலெய்ஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் தங்களது 100-வது போட்டியில் ஒன்றாக களமிறங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT