பால் பாய் கேட்ச் பிடித்ததை பாராட்டும் நியூசி. வீரர்.  படம்: எக்ஸ் / பிஎஸ்எல்
செய்திகள்

பால் பாயின் வெற்றியைக் கொண்டாடிய நியூசி. வீரர்: வைரல் விடியோ!

எல்லைக் கோட்டில் உதவிக்கு இருந்த சிறுவன் (பால் பாய்) கேட்ச் பிடித்ததைக் கொண்டாடிய நியூசி. வீரரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

DIN

எல்லைக் கோட்டில் உதவிக்கு இருந்த சிறுவன் (பால் பாய்) கேட்ச் பிடித்ததைக் கொண்டாடிய நியூசி. வீரரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல் 2024) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திங்கள் கிழமை நடந்த போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட்- பெஷாவர் ஜால்மி அணிகள் மோதிய போட்டியில் நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காலின் முன்ரோ ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது சிக்ஸர் சென்ற பந்தினை எல்லைக் கோட்டில் உதவிக்கு இருந்த சிறுவன் (பால் பாய்) கேட்ச்சினை பிடிக்க முயன்று தோற்றுவிட்டான். எப்படி கேட்ச் பிடிக்க வேண்டும் என முன்ரோ சொல்லிக் கொடுப்பார். பின்னர் அடுத்து சிக்ஸர் வந்த ஒரு பந்தினை பால் பாய் சரியாக கேட்ச் பிடிப்பார். இதைக் கொண்டாடும் விதமாக காலின் முன்ரோ பால் பாயினை கட்டிப் பிடிப்பார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணி வீரர்கள் என்றாலே கிரிக்கெட் உலகில் ரசிகர்கள் அதிகம். இது மாதிரியான நெகிழ்ச்சியான செயல்களால் உலகம் முழ்வது அந்த அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வு பெறும்போது அழுதுகொண்டே ஓய்வுபெற்றார். இதற்கு பலரும் உருக்கமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு நியூசி. வீரர்கள் கிரிக்கெட்டினை நேசிக்கக்கூடியவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT