ஜேம்ஸ் ஆண்டர்சன் 
செய்திகள்

நான் உங்களது 700-வது விக்கெட் என்ற இந்திய வீரர்; ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்த சுவாரசியம்!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட் குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

700-வது விக்கெட்டினை எடுப்பதற்கு முன்பு நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்துள்ளார்.

குல்தீப் யாதவ்

இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது ரன் எடுத்து மறுமுனைக்கு வந்த குல்தீப் யாதவ், நான் உங்களின் 700-வது விக்கெட்டாக மாறப் போகிறேன் என்றார். அவர் ஆட்டமிழக்க முயற்சி செய்யப் போகிறேன் எனக் கூறவில்லை. என்னுடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்து எனது 700-வது விக்கெட்டாக அவர் மாறிவிடுவாரோ என்ற உணர்வு அவருக்குள் இருந்ததாகக் கூறினார். அவர் இவ்வாறு கூறிய அந்தத் தருணம் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம் என்றார்.

அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், ஜேம்ஸ் ஆண்டர்சனின் 700-வது டெஸ்ட் விக்கெட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT