முகப்பு
செய்திகள்

ரஞ்சி இறுதிப் போட்டி: விடா முயற்சியில் விதர்பா அணியின் கேப்டன் (100*)!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றிபெற இன்னும் 205 ரன்கள் தேவை.

Updated On : 14 மார்ச், 2024 at 7:29 AM
விதர்பா அணியின் கேப்டன் கேப்டன் அக்ஷய் வத்கா்
பகிர்:

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றிபெற இன்னும் 205 ரன்கள் தேவை.

சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் விளையாடிய விதா்பாவோ 105 ரன்களுக்கே சரிந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய மும்பை, 418 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது.

இதன்மூலம், இறுதி ஆட்டத்தில் 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் விதா்பா, கடைசிநாளான இன்று உணவு இடைவேளை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 333 ரன்கள் சோ்த்துள்ளது.

விதர்பா அணியின் கேப்டன் கேப்டன் அக்ஷய் வத்கா் 100* ரன்களுடனும் , ஹா்ஷ் துபே 64* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

மும்பை 41 முறையும் விதர்பா 2 முறையிம் ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →