ஐபிஎல் 2024-இன் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து பல அணிகளும் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், அணியின் வீரர்கள் பயிற்சியைத் தொடங்குவதற்காக அவர்களது சொந்த அணியின் மண்ணுக்கு வருகை புரிந்துள்ளனர்.
தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஐபிஎல் -இன் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இதுபோல தேர்தல் காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பிசிசிஐ இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. மேலும், ஐபிஎல் போட்டி அட்டவணை ஒரு பாதி மட்டுமே வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.