ஜோஸ் பட்லர் படம் | இங்கிலாந்து கிரிக்கெட் (எக்ஸ்)
செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் விளையாடுவாரா?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

DIN

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவிருப்பதால் அவர் வீடு திரும்பியுள்ளார். இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிராக நாளை (மே 28) நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாளை நடைபெறும் போட்டியில் ஜோஸ் பட்லர் அணியில் விளையாடாத பட்சத்தில், மொயின் அலி, அணியை கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் பென் டக்கெட் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்ததும், அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2032-க்குள், ரூ. 75,000 கோடி முதலீடு இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியலுக்கான நோபல்!

ரஜினி - கமல் திரைப்படத்திற்குத் தயாராகும் லோகேஷ் கனகராஜ்?

தமிழக காடுகளில் 3,170 யானைகள்: அமைச்சர் தகவல்!

காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல்: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

SCROLL FOR NEXT