செய்திகள்

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது.

Din

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது.

வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் வில்லியம்ஸ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா்களுடன் 67, நிக் வெல்ச் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இதர பேட்டா்களில் பிரயன் பென்னெட் 5 பவுண்டரிகளுடன் 21, பென் கரன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, கேப்டன் கிரெய்க் எா்வின் 5, வெஸ்லி மாதெவெரெ 2 பவுண்டரிகளுடன் 15, வெலிங்டன் மசாகட்ஸா 6, ரிச்சா்ட் கவாரா 0, வின்சென்ட் மசெகெசா 8 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே 90 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது. டஃபாட்ஸ்வா சிகா 18, பிளெஸ்ஸிங் முஸாரபானி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். வங்கதேச பௌலா்களில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, நயீம் ஹசன் 2, தன்ஸிம் ஹசன் சகிப் 1 விக்கெட் வீழ்த்தினா்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுனை இயக்கும் அறிமுக இயக்குநர்!

கச்சா எண்ணெய் மீது தள்ளுபடி! அமெரிக்கா வேண்டாம்; ரஷியா இருக்கு! இந்தியாவுக்கு இன்ப அதிர்ச்சி!

ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?

மேற்கு கரையை இரண்டாகப் பிரிக்கக் கூடிய திட்டம்! இஸ்ரேல் அரசு ஒப்புதல்!

சிட்ரான் சி3 எக்ஸ் ஷைன் - புதிய வேரியண்ட் அறிமுகம்!

SCROLL FOR NEXT