மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஜிங்க்யா ரஹானே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு, சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதையாக பார்க்கிறேன்.
அடுத்து உள்ளூர் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அணியின் புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். எனவே நான் மும்பை அணியின் கேப்டன் பதவியில் தொடர வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்.
இருப்பினும், ஒரு வீரராக எனது சிறந்ததை வழங்க உறுதியாக உள்ளேன். மும்பை அணியுடன் எனது பயணத்தை தொடர்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மும்பை அணியின் அடுத்த கேப்டனாக பிரபல வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான ரஹானே, 90 ஒருநாள், 20 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுதவிர ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக 198 ஆட்டகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.