மும்பை: ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான அணிகளில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை பிளேயர் ஸ்வாபிங் டிரேடிங் மூலம் அணியில் இணைத்துள்ளது.
ஐபிஎல் 2026ஆம் ஆண்டு சீசனுக்கான அணி வீரர்களின் மாற்றங்கள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு இறுதி செய்து வெளியிட வேண்டும் என்பதால், வீரர்களை வாங்குவதிலும் மற்ற அணிக்கு வழங்குவதிலும் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சில முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது. அதாவது, சிஎஸ்கே அணிக்குள் சஞ்சு சாம்சனை கொண்டுவந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைந்ததாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேவேளையில், நியூசிலாந்து இணையர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டு கான்வே, ரூ.6.25 கோடிக்கும், ரச்சின் ரூ.4 கோடிக்கும் சிஎஸ்கே அணி வாங்கியிருந்த நிலையில், இருவரும் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தாததால், விடுவிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியில் இருந்த நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடிக்கு தில்லி அணி வாங்கி இருக்கிறது.
இன்னும் சில மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதையும் படிக்க.. பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.