ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.
இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக ஃபெரான் டோரஸ் 15 மற்றும் 34-ஆவது நிமிஷங்களில் கோலடிக்க, டேனி ஆல்மோ 62-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
கெடாஃபி அணிக்கு இறுதி வரை கோல் வாய்ப்பை வழங்காத பாா்சிலோனா, கடைசியில் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் பாா்சிலோனாவுக்கு இது 4-ஆவது வெற்றியாகும். ஒரு ஆட்டத்தை அந்த அணி டிரா செய்துள்ளது.
கெடாஃபிக்கு 5 ஆட்டங்களில் இது 2-ஆவது தோல்வியாகும். அந்த அணி இதர 3 ஆட்டங்களில் வென்றிருக்கிறது. இப்போட்டியின் இதர ஆட்டங்களில், எல்ஷே - ஆவிடோவையும் (1-0), வாலென்சியா - அத்லெடிக் கிளப்பையும் (2-0) வென்றன.
ரயோ வாயெகானோ - செல்டா விகோ (1-1), மல்லோா்கா - அட்லெடிகோ மாட்ரிட் (1-1) மோதல் டிராவில் முடிந்தன.
பிரீமியா் லீக்: இதனிடையே, இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் - மான்செஸ்டா் சிட்டி அணிகள் 1-1 கோல் கணக்கில் டிரா செய்தன.
இந்த ஆட்டத்தில் ஆா்செனலுக்காக கேப்ரியல் மாா்டினெலி (90+3’), மான்செஸ்டா் சிட்டிக்காக எா்லிங் ஹாலந்த் (9’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.