டி20 உலகக் கோப்பை

உலகக் கோப்பை சாம்பியனை டாஸ் முடிவு செய்யுமா?: ஆஸி. கேப்டன் பதில்

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் வெற்றியாளரை டாஸ் முடிவு செய்யாது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நாளை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது. 2-வதாகப் பந்துவீசிய பல அணிகள் பனிப்பொழிவுச் சிக்கலை எதிர்கொண்டு தோல்வியடைந்தன. இதனால் டாஸ் வென்ற பெரும்பாலான அணிகள் முதலில் பந்துவீசவே முடிவெடுத்தன. பெரும்பாலான ஆட்டங்களில் 2-வதாக பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றதால் இறுதிச்சுற்று ஆட்டத்திலும் வெற்றியாளரை டாஸ் முடிவு செய்யுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒரு பேட்டியில் டாஸ் முடிவு பற்றி பதில் அளித்ததாவது:

டாஸால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். உலகக் கோப்பைப் போட்டியை ஜெயிக்க வேண்டுமென்றால் முதலில் பேட்டிங் செய்தும் ஜெயிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக டாஸில் தோற்க வேண்டும் என எண்ணினேன். அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் குவிக்க வேண்டும் என எண்ணினேன். டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய மாட்டோம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை என இருந்தேன். இதேதான் இறுதிச்சுற்றிலும். 

ஐபிஎல் ஃபைனல் இறுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்து கோப்பையை வென்ற சென்னையைப் பார்த்தோம். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக ரன்களை எடுப்பதால் எதிரணி பேட்டிங் செய்யும்போது தவறுகள் செய்யத் தூண்ட முடியும். டி20 கிரிக்கெட்டில் இலக்கை விரட்டவே அணிகள் விருப்பப்படும். இதில் சில ஆபத்துகளும் உண்டு. எதிரணி அதிக ரன்களைக் குவித்துவிட்டால் இலக்கை விரட்டுவது கடினம். நியூசிலாந்து அணியை வெல்வது சவாலாக இருக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT