சூர்யகுமார் யாதவ் Ricardo Mazalan
டி20 உலகக் கோப்பை

குறைந்த போட்டிகளில் விராட் கோலியின் உலக சாதனையை சமன்செய்த சூர்யகுமார்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விராட் கோலி சாதனையை சமன்செய்துள்ளார் சூர்யகுமார்.

DIN

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் விராட் கோலி சாதனையை சமன்செய்துள்ளார் சூர்யகுமார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் இலக்குடன் பேட் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர் அடங்கும். ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.

இதன் மூலம் 15 ஆட்ட நாயகம் விருதினைப் பெற்றுள்ளார். இதுதான் சர்வதேச டி20யில் ஒரு வீரர் பெறும் அதிகபட்ச ஆட்டநாயகன் விருதாகும்.

விராட் கோலி 120 போட்டிகளில் படைத்திருக்கும் இந்தச் சாதனையை வெறும் 64 போட்டிகளில் எட்டியிருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT