பந்தினை பவுண்டரிக்கு அடிக்கும் அமெரிக்க அணியின் அணித் தலைவர். Ricardo Mazalan
டி20 உலகக் கோப்பை

தோல்விக்குப் பிறகு அமெரிக்க அணித்தலைவர் உருக்கம்!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்க அணியின் அணித் தலைவர் உருக்கமாக பேசியுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்த அமெரிக்க அணியின் அணித் தலைவர் உருக்கமாக பேசியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் 128க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய மே.இ,தீ. அணி 10.5 ஓவர்களில் 130/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் அமெரிக்க அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறது. மே.இ.தீ. அணி அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்துடன் கடைசி சூப்பர் 8 போட்டியில் விளையாட உள்ளது அமெரிக்க அணி.

இந்தத் தோல்விக்குப் பிறகு அமெரிக்க அணித் தலைவர் (கேப்டன்) ஆரோன் ஜோன்ஸ் கூறியதாவது:

இன்றைய இரவு எங்களது வீரர்களுக்கு கடினமான நாள். நாங்கள் 170- 180 ஆவது அடித்திருக்க வேண்டும். போட்டியின் பாதி ஓவர்களில் நாங்கள் அதிகமான விக்கெட்டுகளைப் பறிகொடுத்தோம். அதனால் அழுத்தத்தில் மாட்டிக்கொண்டோம். சில நேரங்களில் இப்படி நடக்கும். அப்படியாகினும் நாங்கள் அதிகமான ரன்களை அடித்திருக்க வேண்டும். பந்து வீச்சில் கடினமாக முயற்சித்தோம். இருப்பினும் மே.இ.தீ. அணியின் பேட்டிங் பலம் தெரியும்.

இங்கிலாந்து உடனான போட்டி நன்றாக இருக்கும். அதற்கான சவாலுக்கு தயார். இன்று ஓய்வெடுத்து ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு தயாராக வேண்டும். அமெரிக்க அணிக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவளித்தவர்களுக்கும் மிக்க நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT