முகப்பு
தமிழ்நாடு

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் வைகோ வாகனம் மீது தாக்குதல்!

உடல்நலக்குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக  தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின்... 

Updated On : 17 டிசம்பர், 2016 at 10:09 PM
பகிர்:

சென்னை: உடல்நலக்குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக  தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க வந்த மதிமுக தலைவர் வைகோவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.   

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி (92), தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வரிசையில் இன்று மாலை மதிமுக தலைவர் வைகோ கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அங்கே குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அவர்களின் எதிர்ப்பினால் அதிர்ச்சியடைந்த வைகோ வாகனத்தை திரும்புமாறு உத்தரவிட்டார். இருந்த போதிலும் ஆத்திரத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் அவருடைய வாகனத்தை தாக்க முயன்றனர். அவருடைய வாகனத்தின் மீது கற்கள்,காலணிகள் வீசப்பட்டன.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமம் ஏற்பட்டு, சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.    இதனிடையே வைகோ அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.