அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேனர் மாறியது: பூங்கொத்துடன் சசிகலா
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதிமுக பொதுச் செயலராக சசிகலாவை தேர்வு செய்வது, மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது தர வலியுறுத்துவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்கள் நிறைவேறியதுமே, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில், ஜெயலலிதாவின் பெரிய படம் இருந்த பேனருக்கு மேல் புதிய பேனர் மாற்றப்பட்டது. அதில், ஜெயலலிதா படம் இருந்த இடத்தில், சசிகலாவும் ஜெயலலிதாவும் இடம்பெற்றுள்ளனர். சசிகலா பூங்கொத்து கொடுப்பது போன்று அந்த படம் உள்ளது.
Advertisement