அதிமுக பொதுச் செயலராக ஜனவரி 2ல் பதவியேற்கிறார் சசிகலா
அதிமுக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே. சசிகலா, வரும் ஜனவரி 2ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: அதிமுக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே. சசிகலா, வரும் ஜனவரி 2ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சென்னை வானகரத்தில் துவங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
Advertisement
அதிமுக பொதுச் செயலராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நிலைக் குறைவு காரணமாக டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதிமுக பொதுச் செயலராக, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவை பதவியேற்றுக் கொள்ளுமாறு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.