முகப்பு
தமிழ்நாடு

குடிபோதையில் சொகுசு கார் ஓட்டிய மாணவர்: ஆட்டோ டிரைவர் பலி!

குடித்து விட்டு சொகுசு காரை ஒட்டி வந்த மாணவர் ஒருவர், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களில் மோதியதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார்.

Updated On : 19 செப்டம்பர், 2016 at 5:41 PM
பகிர்:

குடித்து விட்டு சொகுசு காரை ஒட்டி வந்த மாணவர் ஒருவர், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களில் மோதியதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார்.

திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில், சென்னை கதீட்ரல் சாலையில் வரிசையாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களின் மேல், அவ்வழியாக வந்த சொகுசுக்கார் ஒன்றுவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம்(29) என்ற ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் கார் ஒட்டி வந்த சட்டக் கல்லூரி மாணவர்  விகாஸ் விஜயானந்த் (22) கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மது அருந்தி இருந்தது தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த  'போர்ஷே' வகை கார் விபத்தில் முற்றிலும் சிதைந்து விட்டது.

Advertisement

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.