தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை!

DIN

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள்  அமைச்சர் அரங்கநாயகத்திற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 1991-96 ஆண்டு ஆட்சிக்காலத்தில் கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்தார்.அப்போதைய காலகட்டத்தில் தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக பின்னர் வந்த திமுக ஆட்சிக்காலத்தில் அவர் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள்  அமைச்சர் அரங்கநாயகத்திற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இவர் தற்பொழுது அதிமுக ஓ.பி.எஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT