சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களை அகற்றியது குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களை அகற்றியது குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், டிடிவி தினகரன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை அவர் பார்த்துக் கொள்வார். நாங்கள் ஒதுங்கிவிட்டோம் என்றார்.
இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, ஓபிஎஸ் அணி எப்போது வந்தாலும் பேசத் தயார் என்று பதிலளித்தார்.
சசிகலாவின் பேனர்களை அகற்றியது பற்றிய கேள்விக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களை அகற்றியது, நாங்கள் எடுத்த சுய முடிவு என்றார் அமைச்சர்.