முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பயணத்திட்டம் ரத்து: தொண்டர்கள் அதிருப்தி

அதிமுக அணிகள் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதையடுத்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு விவகாரத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதையடுத்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் பயணத்திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து இன்று திங்கள்கிழமை காலை 10 மணி முதல் (ஆக.,21) ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும், முதல்வர் பழனிசாமி வீட்டிலும் தனித்தனியாக ஆலோசனை நடந்து வந்தது. இன்று இரு அணி தலைவர்களும் அதிமுக தலைமை அலுவலகம் வருவதாக இருந்தது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க, பழனிசாமி தரப்பினர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. இதனால், சசிகலா நீக்கம் பற்றிய எழுத்துப்பூர்வமான தீர்மான நகல் அளிக்கப்பட்ட பிறகே கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி விட்டதாகவும் தகவல் வெளியாயானது.

இதையடுத்து தலைமை அலுவலகம் செல்லும் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் பயணத்திட்டம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  
பயணத்திட்டம் ரத்துக்கு காரணம் ஓபிஎஸ் தரப்பே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகி கடைசியாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் அதிருப்தியுடன் கலைந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →