மு.க.ஸ்டாலினுக்கு கண்புரைஅறுவை சிகிச்சை
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 3) கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு கண்புரைஅறுவை சிகிச்சை
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 3) கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 3) கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மு.க.ஸ்டாலினுக்கு (64) சில நாள்களாக இடது கண்ணில் பிரச்னை காணப்பட்டது. பரிசோதனையில் இடது கண்ணில் புரை உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல் உள்ளிட்ட அடிப்படைப் பரிசோதனைகள் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர் திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
செயற்கை விழி லென்ஸ்: மருத்துவமனையின் கண்புரை அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரேமா பத்பநாபன் அவருக்கு பகுதி மயக்க மருந்து அளித்து, அறுவை சிச்சை மூலம் புரையை அகற்றிவிட்டு, செயற்கை விழி லென்ஸை ('இண்ட்ராகுலர் லென்ஸ்) பொருத்தினார்.
இரண்டரை மணி நேரத்தில்... அறுவைச் சிச்சைக்குப் பின்பு காலை 11.30 மணியளவில் மு.கஸ்டாலின் வீடு திரும்பினார். தொடர் மருத்துவ கண்காணிப்புக்காக செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 4) அவர் மருத்துவமனைக்கு வர உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
6 மாதங்களுக்கு முன்பு... ஸ்டாலினின் வலது கண்ணில் ஆறு மாதங்களுக்கு முன்பு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, செயற்கை விழி லென்ஸ் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.