காங்கிரஸ் ஆட்சியில் ஐம்பூதங்களிலும் ஊழல்; பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் புகாரும் இல்லை: வெங்கையா நாயுடு
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிலம், காற்று, சுரங்கம், 2ஜி, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் நடந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் புகாரும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நிலம், காற்று, சுரங்கம், 2ஜி, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் நடந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் புகாரும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சியை வெங்கையா நாயுடு இன்று காலை திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மீது எதிரிகளால் ஒரு ஊழல் புகார் கூட கூறமுடியவில்லை. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நிலம், காற்று, சுரங்கம், 2ஜி, நிலக்கரி, காமன்வெல்த் என அனைத்திலுமே ஊழல் நடந்தது.
அதே சமயம் கடந்த 3 ஆண்டுகளில் பாஜக ஆட்சியின் மீது ஒரு ஊழல் புகார் கூட கூறமுடியவில்லை.
அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகின்றன. மத்திய அரசே நேரடியாக மாநிலங்களை தேடி வந்து சேவை செய்யும் நிலை உள்ளது என்று தெரிவித்தார்.