முகப்பு
தமிழ்நாடு

திமுக எழுப்பிய பிரச்னையால் ஓரணியான அதிமுக அணிகள்

திமுக எழுப்பிய பிரச்னையால் அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளும் ஓரணியில் நின்று பேரவைக்குள் புதன்கிழமை ஆலோசனை நடத்தின.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:45 PM
பகிர்:

திமுக எழுப்பிய பிரச்னையால் அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளும் ஓரணியில் நின்று பேரவைக்குள் புதன்கிழமை ஆலோசனை நடத்தின.
அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., சரவணன், ஆங்கில ஊடகத்தில் தெரிவித்ததாக வெளியான விடியோ குறித்து பேரவையில் திமுக பிரச்னை எழுப்பியது.
இதனால், பேரவை நடவடிக்கைகள் அனைத்தும் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டன. அப்போது, அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., செம்மலையுடன் பேரவையிலேயே ஆலோசனை நடத்தினர்.
பிரச்னைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த எம்.எல்.ஏ.,சரவணனிடம் அதிமுக அம்மா அணியின் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்.எல்.ஏ., இன்பதுரை ஆகியோர் பேசினர். அப்போது பேரவையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரிடம் யாரும் பேசவில்லை.
பிளவுபட்டிருந்த போதும், திமுக எழுப்பிய பிரச்னையால் இரு அணிகளைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் விவாதித்துக் கொண்டது பேரவைக்கு வந்திருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →