முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேர் நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேரின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ ஒப்புதல் அளித்துள்ளார்.

Updated On : 21 ஜூன், 2017 at 5:50 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:18 PM

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேரின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ ஒப்புதல் அளித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவினை விட குறைவான நீதிபதிகளோடு நாட்டில் செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றமும் ஒன்று. இந்நிலையில் மத்திய அரசோடு ஆலோசித்து, ஆறு நீதிபதிகளின் பெயர்களை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது.

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு: பவனி சுப்பாராயன், ஜெகதீஷ் சந்த்ரியா, ஸ்வாமிநாதன், தண்டபாணி, தெய்வ சிகாமணி மற்றும் அப்துல்  குதோஷ் ஆகியோரே தற்பொழுது நியமனம் செய்யப்பட்டவர்களாகும்.    

Advertisement

இவர்கள் ஆறு பேரின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜீ தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.