பதவி போனாலும் பரவாயில்லை; பாஜகவுக்கு ஓட்டு இல்லை: தமிமுன் அன்சாரி அதிரடி!
என்னுடைய பதவியே பறிபோனாலும் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்
தமிழ்நாடுபதவி போனாலும் பரவாயில்லை; பாஜகவுக்கு ஓட்டு இல்லை: தமிமுன் அன்சாரி அதிரடி!
என்னுடைய பதவியே பறிபோனாலும் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்
சென்னை: என்னுடைய பதவியே பறிபோனாலும் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான இவர், அந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
ஆனால் தற்பொழுது அதிமுக மூன்று அணிகளாக சட்டமன்றத்தில் பிரிந்து செயல்பட்டு வருகிறது. முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது, அன்சாரி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் தற்பொழுது மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வரின் பதிலில் திருப்தி இல்லாமல், இவரைப் போலவே அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்களான தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோருடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் தற்பொழுது ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.அதிமுக அநேகமாக பாஜகவுக்கு ஆதரவு தந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். அதிமுக கொறடா ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்க உத்தரவிட்டாலும், தான் வாக்களிக்க போவதில்லை என்றும், அதன் காரணமாக தன்னுடைய பதவி பறிபோனாலும் பரவாயில்லை என்றும் அன்சாரி அறிவித்துள்ளார்.