பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்கும் பட்ஜெட் : ஸ்டாலின் கருத்து!
தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே இல்லை; இது பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்கும் பட்ஜட் ...
தமிழ்நாடுபூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்கும் பட்ஜெட் : ஸ்டாலின் கருத்து!
தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே இல்லை; இது பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்கும் பட்ஜட் ...
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமே இல்லை; இது பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்கும் பட்ஜட் என்று சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிதாக பதவியேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் முதல் நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று அவையில் தாக்கல் செய்தார். இது குறித்து திமுகவின் செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது புதிய மொந்தையில் பழைய கள் எண்ணும் நிலையில்தான் உள்ளது.அதிமுக சார்பாக முதல்வர்கள் மாறினாலும் சமர்ப்பிக்கபப்டும் பட்ஜெட் என்னவோ கடனில்தான் உள்ளது. நம் மாநிலத்தை மிகப் பெரிய கடனாளியாக்குவதுதான் இவர்களின் ஒரே சாதனை போலும்.
பட்ஜெட்டில் எந்த விதமான புதிய திட்டங்களும் இல்லை. குறிப்பாக வறட்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்பது பற்றியெல்லாம் எதுவும் இல்லை. மேலும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பொழுது 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் அவற்றிற்கு நிதிஒதுக்கீடு எதுவும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தெல்லாம் ஒரு அறிவிப்பும் இல்லை.
முக்கியாமாக தமிழகத்தில் மின் தேவைக்காக புதிதாக மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வருவது பற்றியும் அறிவிப்புகள் காணப்படவில்லை. தொலைநோக்குத் திட்டம் 2023 என்ன ஆயிற்று என்பது குறித்தும் தெரியவில்லை. மொத்தத்தில் இந்த அரசின் நிதி நிலை அறிக்கை என்பதில் ஒன்றுமே இல்லை.
குற்றவாளிகளால் வழிநடத்தப்படும் இந்த பினாமி அரசானது நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கு என எதுவும் செய்யவில்லை. சுருக்கமாக இது பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்கும் பட்ஜட்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.