கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவக்கம்!
வரும் முன்றாம் தேதி தனது 94-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை: வரும் முன்றாம் தேதி தனது 94-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. அவரது 94-ஆவது பிறந்தநாள் வரும் 3-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் அவரது பிறந்த நாள் மற்றும் சட்டசபையியில் அவரது 60-ஆண்டு கால சேவையை பாராட்டி முக்கியமான தேசிய தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. தற்பொழுது உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் கருணாநிதி அந்த நிகழ்வில் பங்கு பெற வாய்ப்பில்லை
இந்நிலையில் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் இன்று துவங்கப்பட்டுள்ளது. www.wishthalivarr.com என்ற பெயரில் செயல்படும் இந்த தளத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன்மூலம் தொண்டர்கள் அவர்களது வாழ்த்தை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.