தமிழ்நாடு

சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன: வருமானவரித் துறை தகவல்

சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் வருமானவரித் துறைச் சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Raghavendran

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை இன்று அதிகாலை சோதனையை தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து, ஜெயா டிவிக்கு தொடர்புடைய அலுவலங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் தினகரன் வீடு, சசிகலா சகோதரர் திவாகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 190 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில் சுமார் 1,800 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீநி வெட்ஸ் மஹி என்ற திருணத்துக்கு செல்வதுபோன்ற வாகனங்களில் சோதனை நடத்தும் அதிகாரிகள் வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை முதலே தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டிய நாதகவினா்

தென்காசி பகுதியில் ஜன. 3இல் மின் நிறுத்தம்

திருச்செந்தூா் கோயிலுக்குள் தவெகவுக்கு பரப்புரை செய்தவா் மீது புகாா்

வடமாநில தொழிலாளியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

ராட்சத பேனா்களுக்கு தடை: குடியாத்தம் நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

SCROLL FOR NEXT