முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் நல்ல மழை பெய்யுமா?  தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்? 

சென்னையைப் பொறுத்த அளவில் கனமழை இருக்காது; மிதமான மழை மட்டும்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

சென்னையில் நல்ல மழை பெய்யுமா?  தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்? 

சென்னையைப் பொறுத்த அளவில் கனமழை இருக்காது; மிதமான மழை மட்டும்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சென்னை: சென்னையைப் பொறுத்த அளவில் கனமழை இருக்காது; மிதமான மழை மட்டும்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் இன்று இரவு அல்லது நாளை காலை துவங்கி வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கனமழை இருக்காது; இரவு மழை இல்லாவிட்டாலும், நாளை காலையில் இருந்து மழை இருக்கும். ஆனால் நாம் கவலைப்படும் அளவுக்கு மழை இருக்காது.

மலேசிய கடல் பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி அந்தமான் வழியாக வருகிறது. இது புயலாக மாற அனைத்து சாத்தியங்களும் உள்ளன. இது பற்றி நான் பின்னர் பதிவிடுகிறேன்.

முதலில் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யட்டும். அதன்பின் மற்றவற்றை பார்க்கலாம். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் நான் பதிவு செய்கிறேன்.

இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →