முகப்பு
தமிழ்நாடு

சசிகலா மீது மற்றொரு தமிழக அமைச்சரும் பரபரப்புப் புகார்

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா மீது தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:


திருச்சி: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா மீது தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாவும், தினகரனும் காரணம் என்று கூறினார்.

மேலும், டிடிவி தினகரன் வெகு விரைவில் சிறைக்கு செல்லும் காலம் வரப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வி.கே. சசிகலா மீது புகார் கூறியுள்ள நிலையில் மற்றொரு அமைச்சரும் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →