முகப்பு
தமிழ்நாடு

காவிரிக்காக பதவிகளை தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்: கமல் வேண்டுகோள்! 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக பதவிகளைத் தியாகம் செய்ய அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:36 PM
பகிர்:

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக பதவிகளைத் தியாகம் செய்ய அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெள்ளியன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தங்கள் பதவிகளைத் தியாகம் செய்ய அரசியல்வாதிகள் தயாராக இருக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பதிவுகளை ராஜினாமா செய்தால் நன்றாக இருக்கும் .

காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான சரியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும்.

காவிரி பிரச்னைக்காக திமுக கூட்டவுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →